Wednesday, October 20, 2010

Dhirubhai Ambani

Dhirajlal Hirachand Ambani, (Gujarati: ધીરુભાઈ અંબાણી) also known as Dhirubhai, 28 December 1932, - 6 July 2002, was an Indian rags-to-riches business tycoon who founded Reliance Industries in Mumbai with his cousin. Ambani took his company (Reliance) public in 1977, and by 2007 the combined fortune of the family (sonsAnil and Mukesh) was 60 billion dollars, making the Ambani's the second richest family in the world, next to the Walton family. Dhirubhai has been one among the select Forbes billionaires and has also figured in the Sunday Times list of top 50 businessmen in Asia.[1]
Dhirubhai started off as a small time worker with Arab merchants in the 1950s and moved to Mumbai in 1958 to start his own business in spices. After making modest profits, he moved into textiles and opened his mill near Ahmedabad. Dhirubhai founded Reliance Industries in 1958. After that it was a saga of expansions and successes.
Reliance's story as a company has been a 'bitter-sweet' saga in India. While on one hand it remains one the biggest Indian conglomerates but on the other hand it is also a company known to evade taxes and being intransparent[2].It has presence in various sectors like petrochemicals, textiles and is involved in the production of crude oil and gas, to polyester and polymer products. The companies refinery at Jamnagar accounts for over 25% of India's total refining capacity and their plant at Hazira is the biggest chemical complex in India. The company has further diversified into Telecom, Insurance and Internet Businesses, the Power Sector and so on. Now the Reliance group with over 85,000 employees provides almost 5% of the Central Government's total revenue.
In 1986 after a heart attack he has handed over his empire to his two sons Anil and Mukesh. His sons have helped Reliance to grow in a more globalized world after 1991.

RAJINI HIMAYAMALAI TOUR 2010 PHOTOS







Sir Isaac Newton (1642-1727)

The familiar story (which we have second hand) says that Newton invented his theory of gravitation upon seeing an apple drop. Imagine him sitting in an orchard where apples were dropping. In an apple orchard in autumn you will hear something like slow rain: now one falls here, now one over there. Not a bad way to picture Newton's key insight, that the earth's gravity is a field of force pervading all space, pulling things downward at every point.

Albert Einstein (1879-1955)

After he became famous, Einstein got many letters from children. He answered as many as he could, giving simple answers to their questions, and sometimes adding a wry comment. For example:
I hope that your and your friend’s future astronomical observations [sneaking out at night to use a telescope] will not be discovered anymore by the eyes and ears of your school government. This is the attitude taken by most good citizens toward their government and I think rightly so.
Everyone who is seriously involved in the pursuit of science becomes convinced that some spirit is manifest in the laws of the universe, one that is vastly superior to that of man.
Do not worry about your difficulties in mathematics; I can assure you that mine are still greater.

நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்!

வளைகுடா  நாடுக ளில் வேலை செய்யும்  முஸ்லிம்களில்,    கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைக ளைப் போல் தான் வாழ்ந்து வருகின்றனர்.

பெரிய மாளிகைகளின் மூலை யில் இருக்கும் ஒரு சின்ன ரூம்தான் இவர்களது உலகம்.    ரூபாய் 6000 /7000 சம்பளத்தில் ஆரம்பிக்கும்  அரபுலக வாழ்க்கை, 10 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தால் 15000- வரை ஆகும்.  10-20% நபர்களுக்குத் தான் இந்த  வாய்ப்பும் கிட்டும்.    20% சகோதரர்கள் வேறு கம் பெனிக்கோ, ஊருக்கோ சென்று விடுவார்கள்.    மீதம் இருப்பவர்கள் அதே நிலையில், கொடுக்கும் உணவை உண்டு, குடும்பங்களை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து, மொபைல் ஃபோனில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.   இந்த வாழ்க்கையில் பலர் சூழ் நிலைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப குற்றவாளிகளாகவும், இருக்கின்றார்கள்.  நவீன உலக கலாச் சாரத்தின் சீரழிவுகளின் தாக்கம் இன்று கீழ் தட்டு மக்க ளைத் தான் முதலில் தாக்கும் என்பது எதார்த்தம். அதற்கேற்ப இவர்களில் பலர் பல துன் பங்களுக்கு ஆளாகிறார்கள். இதில் வெளியே சொல்ல முடியாத இன்னல்களை ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள் வீட்டு வேலை செய்யும் ஹவுஸ் மெயிட் என்ற இளம் பெண்களே. இதில் தமிழ் பேசுபவர்கள் குறைவு.   சில உண்மை நிகழ்வுகளை தங்கள் முன் வைத்து இன்றைய சூழலில் என்ன தீர்வு என் பதையும் சற்று நோக்குவோம். 

1) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக் குமார் என்பவரை ஒரு விளையாட்டு விபத்தில் சிறு வன் ஒருவன் துப்பாக் கியால் (நிஜத்துப்பாக்கி) காலின் மேல் பகு தியில் சுட்டு விட்டான். குண்டு காலில் பாய்ந்தது. இவரை 4 மாதங்கள் வீட்டு சிறையில் வைத்து, உடல்நிலை சரியான பின் வெளியே விடப் பட்டார். அதையும் தாங்கிக் கொண்டு தான் நம் சகோதரர் ஜெயக்குமார் இருந் துள்ளார். ஆனால் தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டு சிறையில் இருந்த அந்த 4 மாதங்களுக்கு, "நீ தான் வேலையே செய்ய வில்லையே, அதனால் உனக்கு சம்பளம் கிடையாது" என்று முத லாளி சொன்னவுடன் தான் ஜெ யக் குமாருக்கு கோபம் வந்து, இந் திய தூதரகத்தை தமுமுக, மூலம் அணுகினார். 28 நாட்கள் மறு படியும் உண்மையான ஜெயிலில் இருந்து விட்டு, தற்போது நாட்டில் உள்ளார்.

2) மற்றொருவர் தென் மாவட் டத்தைச் சேர்ந்தவர். சத்தம் போட் டு பேசுவதற்குக் கூட பயப்படு பவர். இவர் கடந்த 10 மாதங் களாக வெறும் 20 தினார்கள் (ரூபாய். 3200) சம்பளத்திற்கு வேலை செய் துள்ளார். சில தினங்களுக்கு முன் இவரை கழுத்தைப் பிடித்து நெரித்ததால், இவரால் தற்போது பேச இயலவில்லை. இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று டாக்டரை சந்தித்து விட்டார். ஒரு கோளாறும் இல்லை என்று மருத்துவர் கூறும் நிலை. தொண் டையில் வலி இருக்கின்றது.  இவர் வேலை செய்யும் வீட்டில் 8 பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளார்கள். காலை 7.30 மணிக்கு வண்டியை எடுப்பவர் இரவு 8 மணி வரை நிப்பாட்ட இயலாது.  பேசுவதற்குக் கூடப் பயப்படுபவர் தன்னுடைய சூழலை வெளியே சொல்லாமல் மறுபடியும் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அருகில் இருக்கும் சகோதரர்கள் நமக்கு ஃபோன் செய்தார்கள். 8.2.10 அன்று ஊர் திரும்பினார். 

3) மேலும் சென்ற வருடம் கம்பெ னியில் ஓட்டுனர்களாக வேலை பார்த்து வந்த 9 தமிழர்கள் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் பல அவதிக்குள்ளானார்கள். இவர்களைப் பற்றிய செய்தி குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளிலும் வந்தது. பல தமிழக இயக்கங்களின் உதவியுடன் ஊருக்கு அனுப்பினோம்.

4)  ஏப்ரல் 22 அன்று இந்திய தூதரகத்தின் வாசலில் மாரியப்பன் என்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த சகோதரரை குவைத் ஸ்பான்சர் கம்பியால் அடித்துள்ளார். தற் போது இந்த சகோதரர் இந்திய தூதரக காப்பகத்தில் உள்ளார். தூதரகத்தின் உதவியுடன் விரை வில் ஊர் திரும்புவார்.

இப்படி தொடர் கதைகளாக பல சோக நிகழ்வுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நம் சகோதரர்களின் அறியாமையும், பணம் சம்பாதித்து விட வேண் டும் என்ற ஆவலும், இடைத் தரகர்களின் பேராசையும் தான் ஆகும். எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வை நம் சகோதரர்கள் மத்தியில் நாம் கொண்டு வர வேண்டும். எந்த நோயும் வரும் முன் காப்பதே சாலச் சிறந்ததாக அமையும். இந்தியா ஒளிர்ந்து விட்டதோ இல்லையோ, உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊரிலேயே இன்றைய சூழலில் ரூபாய் 10000/- சம்பாதிக்க நிறைய நல்ல வழிகள் உள்ளன. மனைவி, மக்களோடு கூழானாலும் குடித்து குடும்பத்துடன் வாழலாம். வெளி நாட்டில் டிரைவர் வேலை தான் வேண்டும் என்றால் அதை இந் திய சட்ட விதிமுறைகளுக்கு முழு தும் உட்பட்டு வந்தால் தான், பின் ஏற்படும் பிரச்னைகளை சட்டப்படி சந்திக்க இயலும். தற் போதுள்ள சட்டங்களைச் சரியாக புரிந்து அதன்படி வந்தால்தான், இந்தியத் தூதரகம் பின்னர் ஏற் படும் சிக்கல்களில் சுலபமாக தன் அதிகாரத்தை பயன்படுத்த இயலும். உதாரணமாக தற்போதுள்ள ஒரு சட்டம், படிக்காதவர்கள் எந்த வேலைக்கு வந்தாலும், முதலில் சரியான கான்ட்ராக்ட் (வேலை ஒப்பந்தம்) இல்லாமல் வர இயலாது. சட்டப் படி இந்தியர்களுக்கு குறைந்தது ரூபாய்10000/- சம்பளம் கொடுத்தால் தான் ஒப்பந்தமே எழுத இயலும். இந்த ஒப்பந்தத்தை வெளிநாட்டில் உள்ள இந்திய தூத ரகம் சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் வழ ங்க அது ஒரு தொகையை வசூல் செய்து வைத்துக் கொள்கிறது. இந்த தொகை பின்னர் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு ஊர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நபருக்கு எளிதாக விமான டிக்கட் எடுத்து ஊருக்கு இந்திய தூதரகம் அனுப்பி விடும். தற் போது டிக்கெட்டிற்காக பல மாதங்கள் பலர் சிறையில் வாடும் நிலையே உள்ளது. அடுத்ததாக வேலை செய்யும் ஸ்பான்சரும், விசா கொடுத்தவரும் ஒரே ஆள £க அல்லது குறைந்த பட்சம் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும். இடைத் தரகர்களை நம்பி எங்கோ விசா எடுத்து விட்டு, வேறு எங்கோ வேலை செய்வது சட்டப் படி குற்றமாகும். இதில் பல சூழலில் படித்தவர்களும் ஏமாறுகின்றனர். எந்த வேலை செய்யப் போகிறோமோ அதற்கு சம்பந்தம் உள்ள விசாவிலேதான் வர வேண்டும். உதாரணமாக ஒரு முடி திருத்தும் கடையில் வேலை செய்பவரின் விசாவில் உள்ள தொழிலைப் பார்த்தால், தோட்டக் காரர் என்று இருந்தால் அதுவும் குற்றமே ஆகும்.  அண் மையில் ஒரு சின்ன வளைகுடா நாட்டில் 600 போலி நிறுவனங் களை கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது அப்படி ஒரு கம்பெனியே உண்மையில் இயங்கவில்லை. ஆனால் அந்த கம்பெனியில் வே லை செய்வது போல் 100 பேர்கள் எங்கோ, ஏதோ வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்கும் நம் சகோதரர்கள் பலர் பலியாகி உள்ளனர். 

40 ஆண்டுகளுக்கு முன் வளை குடா நாடுகளில் யாரும் எந்த வேலையும் செய்ய இயலும். படி த்தவர்கள், படிக்காதவர்கள் என் ற பாகுபாடு இல்லாமல், திறமை இருந்தவர்கள் எல்லோரும் சம்பா தித்தார்கள். நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த இட ஒதுக்கீடு என்று கூட இந்த வாய்ப்பை கூறலாம். இதை பயன்படுத்தி, நம் மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய வேண்டும்.  அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நேர்வழி காட்டுவானாக. 

-பொறியாளர் ஷாநவாஸ்

Undiscovered Earth












Stupid directors






dubai seven star